முகப்பு ILO ஆதரவு

செயல்முறைக்கு சர்வதேச தொழில் தாபனத்தின் ஆதரவு

சர்வதேச தொழில் தாபனம், வெற்றிகரமான கொள்கை வகுத்தமைத்தலை உறுதிப்படுத்துவதற்கு பரந்தளவிலான ஆதரவினை வழங்குகின்றது.இவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது.

  • கொள்கை ஆவண வகுத்தமைத்தலுக்கு இட்டுச் செல்வதற்கு சிரேஷ்ட அமைச்சர்களின் செயலகத்திற்கு செயல்முறை முகாமைத்துவ ஆதரவினை வழங்குதல்.
  • எம்.டி.ஜி.எஸ் போன்ற உலகளவில் இணங்கப்பட்ட நிகழ்ச்சிநிரல் அடிப்படையிலான தொழில்னுட்ப உள்ளீடுகள்; மற்றும் கொள்கை ஆவணத்திற்கு உலகளாவிய வேலைவாய்ப்பு நிகழ்ச்சி நிரலை வழங்குதல்.
  • கொள்கை ஆவணத்தினை விருத்தி செய்வதில் தேசிய சீரிய வேலைத் திட்டம'; பிரதிபலிக்கின்ற வகையிலான ஆதரவினை வழங்குதல்.
  • ஏனைய அரச அமைச்சுக்கள், பிராந்திய அரசாங்க நிறுவனங்கள், தொழில்தருநர்களின் அமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் உள்ளடங்கலாக பரந்தளவிலான அக்கறைதாரர்களுடன் தேசிய,பிராந்திய ஆலோசனைகளை இலகுபடுத்துதல்.

சர்வதேச தொழில் தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நாட்டுப் பணிப்பாளர் திரு.டொன்கிளின் லி அவர்களின் செய்தி:


விரைவாக மாற்றமடைகின்ற பொருளாதாரத் தேவைப்பாடுகள், சிறந்த கல்வி மற்றும்; பயிற்சிக் கொள்கைளை விரைவாகக் கைக்கொள்ளக்கூடிய பரந்த அடிப்படையிலான திறமைகள் பெண்கள் மற்றும் ஆண்களுக்குத் தேவைப்படுகின்றதென சர்வதேச தொழில் தாபனம் நம்புவதுடன், தொழில் சந்தைக் கொள்கைகள் பாதகமான உலகமயமாக்கல் தாக்கங்களை எதிர்ப்பதற்கு முக்கியமான சாதனங்களை வழங்க முடியும். அதே வேளை,மக்கள் உள்நாட்டு, சர்வதேச தொழில் சந்தைகளில் வெளிப்படுகின்ற வாய்ப்புக்களின் நன்மகளைப் பெறுவதற்கு அறிவு மற்றும் தேர்ச்சிகளை உடையவர்களாக இருத்தல் அவசியமாகின்றது.

இலங்கை தனது வரலாற்றில் நெருக்கடியான நிலையிலிருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் வேலை வாய்ப்பின்மை சரிவடைந்து அதிகளவான சவால்கள் இன்னமும் இருக்கையில், இலக்கு வைக்கப்பட்ட இடையீட்டு இணக்கம் தேவைப்படுகின்றது.இளைஞர் மற்றும் பெண்களுக்கிi;யிலான வேலைவாய்ப்பின்மை மட்டம் தொடர்ச்சியாக அதிகமாவதுடன், விசேடமாக கல்வி கற்ற இளைஞர்களுக்கிடையில் வேலை வாய்ப்பின்மை வீதம் மிகவும் அதிகமாகின்றது. மேலும் 60மூ இற்கும் அதிகமானோர், முறைசாரா துறையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்படக்கூடிய தன்மை உயர்வான நிலையிலுள்ளதுடன், அதிக வீதமானோர் குறைந்தளவிலேயே வேலையாற்றுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில், சீரிய முறையில் வேலையாற்றுகின்ற நிலைமையை மற்றும் சம்பளங்களை, அதேபோன்று வேலையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தொழில்முயற்சிகளின் போட்டித் தன்மையை, தொழில் அணியின் வேலையாற்றப்படக்கூடிய நிலையை, தொழில் கௌ;வி மற்றும் வழங்கலின் பொருத்தமாந்தன்மையை மேம்படுத்துவதற்கும், செம்மைப்படுத்துவதற்கும், தொழில் சந்தையின் அபிவிருத்தியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்பினை உருவாக்குவதிலும் தேசிய மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை முக்கியமானதொரு பங்கினை வகிக்க வேண்டித் தேவவைப்படுகின்றது.

இந்தக் கொள்கையானது, நாடு தனது மனித வளத்தின் இயலுமைகளை முழுவதுமாக பயன்படுத்தச் செய்யக்கூடியதற்கு அத்திவாரமாக இருக்கும் என்பதுடன், அனைவருக்கும் சீரிய வேலையினை உறுதிப்படுத்துகின்றது என நான் நம்புகின்றேன்.இக்கொள்கை இறுதிவடிவத்தையெடுத்து கைக்கொள்ளப் படுகின்றவிடத்து முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தப்படக்கூடியதொன்றாக இருக்குமென நான் எண்ணுகின்றேன்.

இற்றைப்படுத்தியது திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011 05:01  

சிரேஷ்ட அமைச்சரின் செய்தி

சமீபச் செய்திகள்