முகப்பு சிரேஷ்ட அமைச்சரின் செய்தி

மனித வளங்களுக்கான (சிரேஷ்ட) அமைச்சர் கொளரவ டி.இ.டபிள்யு குணசேகர அவர்களின் செய்தி

நாம் தொழில் சந்தைக்குள் நுழைகின்றவர்களுக்கு வேலைவாய்ப்பினை  வழங்கியுள்ளோம். வருடாந்தம் சுமார் 500இ000 இளைஞர்கள் க.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன், சுமார் 300இ000 பேர் க.பொ.த (உ.த) பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். ஆனால், பல்கலைக்கழகத்திற்குள் நுழைகின்ற வாய்ப்பினைப் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை சுமார் 22இ000 ஆகும். வருடாந்தம் பாடசாலைகளிலிருந்து வெளியேறுகின்ற பாரிய எண்ணிக்கையிலானோருக்கு உற்பத்தித்திறன்சார் வேலைவாய்ப்பினைக் கண்டறிய வேண்டியிருக்கின்றது.இந்த மனித வளங்களின் பயன்பாடு தொழில்சார் கேள்வியினைத் தீர்மானிக்கின்றது.

உலகமயமாக்கப்பட்ட உலகத்தில், இலங்கை அதற்கு போட்டித் தன்மை இருக்கக்கூடிய விடயப்பரப்புகளை கண்டறிய வேண்டித் தேவைப்படுவதுடன், மனித வளங்களின் அபிவிருத்தி தேசிய அபிவிருத்தித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருத்தல் வேண்டும்.இலங்கை,'மஹிந்த சிந்தனை' அபிவிருத்திக் கட்டுக்கோப்பினைக் கொண்டிருப்பதுடன், தேசிய மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையை இந்த அபிவிருத்திக் கட்டுக்கோப்புடன் கூட்டிணைத்தல் வேண்டும். இந்த அரசாங்கம், இலங்கையை சக்திமிகு உலக மையமொன்றாக ஆக்குவதற்கு அதன் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உந்துசக்தியை வழங்கியுள்ளது. 'மஹிந்த சிந்தனை'இ எதிர்காலத்திற்கான தொலைநோக்கு', நாடானது, கடல், ஆகாயம், வர்த்தகம் மற்றும் அறிவின் மையமாக அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதுடன், மனித வளங்களைப் பயனுறுதிவாய்ந்ததாகவும், வினைத்திறனுடையதாகவும் ஒழுங்கமைத்தலின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது.

அத்தகைய அபிவிருத்தி முயற்சிகளை நிறைவேற்றிக்  கொள்வதற்கு உழைக்கும் வர்க்கம் தொழிற்றுறையின் மாறுகின்ற தேவைகளை நிறைவேற்றுகின்ற திறமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆகவே, உரிய திறமைகள், தகைமைகள் மற்றும் அடைவதற்கான மனநிலை வளர்க்கப்படுதல் வேண்டும். ஆகவே, இலங்கை, திறமைகள், ஆற்றல்கள் மற்றும் அபிவிருத்தி அபிலாசைகளுக்கு ஆதரவளிப்பதற்கு நாட்டின் திறமைகளை மாற்றுவதற்கு தகமைகளின் புதிய உருவரை தேவைப்படுகின்றது.இந்த வியடத்தில், தேசிய மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை உத்தியொன்றையும், இக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தையும் வகுத்தமைத்தல் தவிர்க்க முடியாததாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.உரிய அமைச்சுக்கள் வேலைத் திட்டத்தில் தமது உரிய பங்கினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

தனியார் துறையின் பெறுமதிமிகு பங்களிப்பானது நாட்டின் மனித வள அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானது.ஆகவே,தனியார் துறையும்கூட நாட்டின் அபிவிருத்திட்டங்களுக்கு கூட்டிணைவாக உள்ளமை ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.

கல்வி, உயர் கல்வி, வெளிநாட்டு வேலைவாயப்பு ஊக்குவிப்பு,தொழில் அமைச்சுக்கள் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் தற்போது இடம்பெறுகின்றன.ஆகவே, முன்மொழியப்பட்ட தேசிய மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை, உரிய அமைச்சுக்களுக்கிடையில் இசைவினை உறுதிப்படுத்துதல் வேண்டும் என்பதுடன் ஒரு குடையின் கீழான கட்டுக்கோப்புக் கொள்கையொன்றையும் வழங்குதல் வேண்டும்.

நான் பொது மக்களுக்கு வழங்க விரும்புகின்ற செய்தி, தேசிய அபிவிருத்தித்திட்டத்தின் பகுதியொன்றாக  பரந்த, இசைவான தேசிய மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை விருத்தி செய்யப்படுதல் வேண்டும் என்பதாகும். இச்செய்முறையில், அனைத்து அமைச்சுக்கள், ஏனைய அனைத்து அக்கறைதாரர்கள் மற்றும் பொது மக்களின் ஆதரவினையும்,உதவியினையும் நான் வேண்டுகின்றேன்.

சீனாவின் அபிவிருத்தி முயற்சிகளின் வெற்றி அவர்களினால் எடுக்கப்படுகின்ற கல்வி சீர்திருத்தங் களிலிருந்து வந்தவையாக ஆரம்பத்தில் இருந்தன.இலங்கையும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் பயிற்சி நிலைகளில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவையிருக்கின்றது.கல்வி முறைமை நாட்டில் மனித வளங்களின் கேள்வியை நிறைவேற்றுவதற்கு உந்து சக்தியாக இருத்தல் வேண்டும்.

சீனத் தலைவர் டென்ங் எக்அபோயிங் கூறியவாறு இச்செய்முறையில் 'செயல்துறைப் பயன்நாட்ட முடையவர்களாக, கோட்பாட்டுறுதிமிக்கவர்களாகவன்றி நடைமுறைச்சாத்தியமானவற்றை பின்தொடர்பவர் களாக' நாம் இருப்போமாக.

இற்றைப்படுத்தியது புதன்கிழமை, 12 அக்டோபர் 2011 03:34  

சிரேஷ்ட அமைச்சரின் செய்தி

சமீபச் செய்திகள்