முகப்பு செயல்முறை

செயல்முறை

2011 மே மாதத்தில் அமைச்சரவையின் அங்கீகாரத்தின்  பின்னர்,கொள்கையை வகுத்தமைக்கின்ற செயல்முறை தேசிய வழிகாட்டல் குழுவொன்றினைத் தாபித்ததுடன் 2011 யூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அக்கறைதாரர்கள் பலர் நடைமுறைப்படுத்தலினூடாக கொள்கையைப் பார்ப்பதற்கு இணைந்த செயற்படுகின்றனர். இவைகள், நிதி, திட்டமிடல் அமைச்சு, தொழில், தொழில் உறவுகள் அமைச்சு, உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சு, இளைஞர் விவகாரங்கள், தேர்ச்சி அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, உயர் கல்வி அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு என்பவற்றினை உள்ளடக்குகின்றது. தொழில்தருநர்கள் மற்றும் வேலையாளர்களின் அமைப்புக்கள், தொழில்சார் நிறுவனங்கள் போன்ற அத்தகைய ஏனைய அக்கறைதாரர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தோருடன் தீவிரமாக ஆலோசிக்கப்படுகின்றது.

கொள்கை ஆவணத்தை வகுத்தமைத்தல் செயல்முறையானது, மனித வள அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புடன் தொடர்புபட்ட பிராந்திய விடயங்கள் மீது உரிய அக்கறைதாரர்களுடன் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை ஆகிய மூன்று பிராந்திய ஆலோசனைப் பயிற்சிப்பட்டறைகளை நடத்து வதனை உள்ளடக்குகின்றது. பல்வேறுபட்ட அக்கறைதாரர்களுடனான பரந்தளவிலான ஆலோசனைகள், இக்கொள்கை நடைமுறையானதும், நடைமுறைப்படுத்தக்கூடியதும் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், 2011 யூன் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான தேசிய மட்டத்திலான பயிற்சிப்பட்டறை மேலும் முன்னுரிமைகளை தெளிவாக்குவதற்கு உதவுவதுடன், தேசிய மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை பரந்தளவிலான, அனைத்தையும் உள்ளடக்கியதும் என்பதை உறுதிப்படுத்து கின்றது.

வரைவுக் குழு, 2011 ஒக்டோபர் மாதத்தில் தமது வேலையினை ஆரம்பிப்பதுடன், வரைவு அறிக்கைக்கையானது 2011 திசெம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இற்றைப்படுத்தியது புதன்கிழமை, 12 அக்டோபர் 2011 03:12  

சிரேஷ்ட அமைச்சரின் செய்தி

சமீபச் செய்திகள்