தேசிய மனிதவளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையின் குறிக்கோள்கள்

இலங்கை அரசாங்கமானது, சிரேஷ்ட அமைச்சர்களின் செயலகத்தினூடாக சர்வதேச தொழில் தாபனத்தின் தொழில்னுட்ப உதவியுடன் 2011 யூன் மாதத்தில் தேசிய மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையை வகுத்தமைப்பதனை ஆரம்பித்திருந்தது. இது பரந்தளவிலான, அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கை ஆவணமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆவணத்தின் பரந்தளவிலான தன்மை, தேசிய மனிதவளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையை உடறுக்கின்ற விடயங்களாகக் கொண்டிருக் கின்ற  தற்போதிருக்கின்ற வௌ;வேறு கொள்கை ஆவணங்களுக்கிடையில் கொள்கை இசைவினை உறுதிப்படுத்தும். இது, நடைமுறைப்படுத்தலை இலகுபடுத்துவதுடன், இலக்கு வைக்கப்பட்ட இடையீட்டு இணக்கம் பயனுறுதிவாய்ந்ததாகவும், வினைத்திறனுடனும் ஆற்றப்படுகின்றது என்பதையும் உறுதிப்படுத்தும். இக்கொள்கை 2012 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறுதி வடிவத்தை எடுக்கும்.


 

சிரேஷ்ட அமைச்சரின் செய்தி

சமீபச் செய்திகள்